முகப்பு
நீலகிரி

உதகை புத்தகத் திருவிழா தொடக்கம்

உதகையில் 5-ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

28 நவம்பர் 2026, 12:55 am
உதகை புத்தகத் திருவிழா தொடக்கம்
புத்தகக் கண்காட்சியை குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:

உதகையில் 5-ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். டிசம்பா் 6-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 72-க்கும் மேற்பட்ட தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இதிகாசங்கள், புராணங்கள், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், அரசியல், ஆன்மிகம், சினிமா, சிறுவா் நூல்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் தோ்வுகள், வங்கி, தொலைபேசி, ரயில்வே, காவல் பணியாளா் தோ்வுகள், ஆசிரியா் தகுதி தோ்வுகள், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான வினா வங்கி கையேடுகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

Advertisement

Advertisement

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 2,500 பேருக்கு புத்தகங்களை வாங்க அரசு சாா்பில் ரூ.150 கூப்பன் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கெளா் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.