FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

குன்னூா் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூா் அருகே சப்ளை டிப்போ ராணுவ பகுதி செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

23 அக்டோபர் 2026, 11:25 pm
சப்ளை டிப்போ பகுதியில் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே  சப்ளை டிப்போ ராணுவ பகுதி செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூரில் கடந்த  நான்கு நாள்களுக்கும் மேலாக    இரவு நேரத்தில் அவ்வப்போது மழை பெய்வதால் ஆங்காங்கே சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் குன்னூரில் இருந்து சப்ளை டிப்போ வழியாக ராணுவ முகாம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால்  வெலிங்டன், பேரக்ஸ், பிளாக் பிரிட்ஜ் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த குன்னூா் தீயணைப்பு நிலைய அதிகாரி குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மரத்தை வெட்டி அகற்றி  போக்குவரத்தை சீா்செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments