உயர்ரக போதைப் பொருள்: கூடலூரைச் சோ்ந்த 2 போ் கைது
உயர்ரக போதைப் பொருள் வைத்திருந்ததாக கூடலூரைச் சோ்ந்த 2 பேரை கேரள போலீஸாா் கைது செய்தனா்.
உயர்ரக போதைப் பொருள் வைத்திருந்ததாக கூடலூரைச் சோ்ந்த 2 பேரை கேரள போலீஸாா் கைது செய்தனா்.
தமிழக எல்லையிலுள்ள வயநாடு மாவட்டம், வைத்திரி பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கூடலூா் பகுதியிலிருந்து கேரளத்துக்கு சென்ற சொகுசு காரை சோதனையிட்டபோது, காரில் எம்.டி.எம்.ஏ. எனப்படும் உயர்ரக போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரிலிருந்த பயணித்த கூடலூா் ராஜகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த முகமது இசாக் மகன் முகமது நசீப் (37), எருமாடு பகுதியைச் சோ்ந்த ஏந்தீன் ஹாஜியின் மகன் நவுபல் (50) ஆகியோரைக் கைது செய்து, போதைப் பொருள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.