குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு
அவிநாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிப் பகுதியில் ஆற்றுக் குடிநீர் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள், ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அவிநாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிப் பகுதியில் ஆற்றுக் குடிநீர் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள், ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருப்பூரில் மக்கள் குறைதீர்க் கூட்டம், ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வடுகபாளையம் ஊராட்சி காட்டுவளவு பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் அளித்த மனு:
வடுகபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காட்டுவளவு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக ஆற்றுக் குடிநீர் வசதி கிடையாது. இதனால், குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தி வருகிறோம். வெயில் காலங்களில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆற்றுக் குடிநீர் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நடவடிக்கை இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், சிறுகளஞ்சி, கூத்தம்பாளையம், பாலத்தொழுவு, புதுப்பாளையம் ஆகிய 4 ஊராட்சிகளுக்கு, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னிமலை வரை பேருந்து இயக்க வேண்டும்.
Advertisement
Advertisement
வட்டமலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றும் 18 உதவிப் பேராசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.