ஆலாம்பாடி கிராமத்தில் பால் குளிரகம் திறப்பு
காங்கயம் அருகே, ஆலாம்பாடி கிராமத்தில் 4,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால் குளிரகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் அருகே, ஆலாம்பாடி கிராமத்தில் 4,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால் குளிரகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலாம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் பி.சி.ராமசாமி தலைமை வகித்தார். காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், மருத்துவர் வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன் பால் குளிரகத்தை திறந்து வைத்தார்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், காங்கயம் நகர்மன்றத் தலைவர் ஜி.மணிமாறன், துணைத் தலைவர் சி.கந்தசாமி, கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஏ.பி.துரைசாமி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொதுமேலாளர் ஆர்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.