FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பல்லடத்தில் கோழியின நோய் ஆராய்ச்சிக் கூடம்

பல்லடத்தில் விரைவில் சர்வதேச தரத்தில் கோழியின நோய் ஆராய்ச்சிக் கூடம் அமைய உள்ளது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

பல்லடத்தில் விரைவில் சர்வதேச தரத்தில் கோழியின நோய் ஆராய்ச்சிக் கூடம் அமைய உள்ளது.

பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு, சர்வதேச தரத்தில் கோழியின நோய் ஆய்வுக் கூடம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

பல்லடம், கொச்சி வழித்தடத்தில், கால்நடைத்துறைக்கு சொந்தமான, 4.31 ஏக்கரில் ரூ. 2.43 கோடி மதிப்பில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை  அந்த இடத்தில் வளர்ந்திருந்த முட்செடிகள் அகற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியது:

இந்த ஆராய்ச்சிக் கூடத்தில், கறிக்கோழி முட்டை தரமானதாக உள்ளனவா என்று ஆய்வு செய்து சான்று வழங்கப்படும். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் கோழிகளுக்கு நோய் வராமல் தடுக்கும் முறை குறித்து அவ்வப்போது ஆய்வறிக்கை அனுப்பப்படும்.கறிக்கோழி பண்ணைகளில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தாக்காமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் ஆய்வுக்கூடம் மூலம் அறிவுறுத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments