விழிப்புணர்வு ஊர்வலம்
சுல்தான்பேட்டை ஒன்றியம், எஸ்.அய்யம்பாளையத்தில் தனி நபர் கழிப்பிடம் கட்டுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுல்தான்பேட்டை ஒன்றியம், எஸ்.அய்யம்பாளையத்தில் தனி நபர் கழிப்பிடம் கட்டுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எஸ்.அய்யம்பாளையம் கிராமத்தில், தனிநபர் கழிப்பிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் நோக்கத்தை விளக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் அக்கிராமத்தில் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், கழிப்பிடம் அமைக்கும் அவசியம் குறித்து பிரசாரம் செய்யப்பட்டது.
இதில், ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் ஈஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.