கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
தாராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சின்னபுத்தூர், பாப்பனூத்துப் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (23), விவசாயி. மேலும், இவர் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆடு மேய்க்கும்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில், ஈஸ்வரமூர்த்தி வீடு திரும்பாததால் அவரது மனைவி பவித்ரா காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
அதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த ஈஸ்வரமூர்த்தியின் சடலத்தை மீட்டு, இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.