'கணம்' இயக்குநரின் புதிய படத்தில் இணைந்த ருக்மிணி வசந்த்!
ருக்மிணி வசந்த் நாயகியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது பற்றி...
'கணம்' திரைப்பட இயக்குநரின் புதிய திரைப்படத்தில் ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்கவுள்ளார்.
‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ ஆகிய படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ருக்மிணி வசந்த். இவர் தற்போது ‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில் ருக்மிணி வசந்துடன் இணைந்து தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீ கார்த்திக் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்தின் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ள படக்குழு, ருக்மிணி வசந்த் ஏற்று நடிக்கும் ‘தாரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் பிரத்யேக அறிவிப்பு விடியோவையும் வெளியிட்டுள்ளது.
இந்த விடியோவில் ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோர் ‘தாரா’ கதாபாத்திரத்திற்கான இறுதி தேர்வில் ஈடுபடுகின்றனர்.
அந்த சூழலில் எதிர்பாராத விதமாக வரும் ஓர் அறிவிப்பு அவர்களை திகைக்க வைக்கிறது. தொடர்ந்து, ருக்மிணி வசந்த் அறிமுகமாகும் காட்சியுடன் விடியோ நிறைவடைகிறது.
ருக்மிணி வசந்த் ‘தாரா’ கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rukmini Vasanth is set to play the lead role in the new film by the director of the movie 'Ghanam'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.