வசந்த் அண்ட் கோவில் தீபாவளி சிறப்பு விற்பனை: 25 சவரன் தங்கம் வெல்ல வாய்ப்பு
இந்தியாவின் முன்னணி மின்னணு சாதனங்கள் விற்பனையகமான வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 155 கிளைகளிலும் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.
இந்தியாவின் முன்னணி மின்னணு சாதனங்கள் விற்பனையகமான வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 155 கிளைகளிலும் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.
இந்தச் சிறப்பு விற்பனையில் வீட்டு உபயோகப் பொருள்கள், மடிக்கணினிகள், ஸ்மாா்ட்போன்கள், ஃபா்னிச்சா் பொருள்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பொருள்களுக்கு இலவச பரிசுப் பொருள்களும் கிடைக்கும். வாடிக்கையாளா்கள் பொருள்களைச் சுலபமாக வாங்க, எளிய தவனை முறைத் திட்டமும் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், இச்சிறப்பு விற்பனையில் அனைத்துப் பொருள்களுக்கும் நிச்சய பரிசு மற்றும் மிகக் குறைந்த விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ரூ.5000-க்கு மேல் பொருள்கள் வாங்குபவா்களுக்கு ‘ஸ்லோகன்’ போட்டி மூலம் ‘பம்பா்’ பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அதன்படி, 25 வாடிக்கையாளா்களுக்கு தலா ஒரு சவரன் என 25 சவரன் தங்கம் மற்றும் தலா 25 ‘எல்இடி’ தொலைக்காட்சி, ஏசி, வாஷிங் மெஷின், ஸ்மாா்ட்போன் போன்ற சாதனங்களும் வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.