FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பதிவு வழங்கக் கோரிக்கை

பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு தமிழக அரசு பதிவு வழங்க வேண்டும் என்று தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு தமிழக அரசு பதிவு வழங்க வேண்டும் என்று தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து முதல்வருக்கு சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய  மனு விவரம்:
தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரம்பரை சித்த மருத்துவர்கள் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 1993ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசுப் பதிவு வழங்கி வாழ்வாதாரம் அளித்தார்.
மேலும், அவர் கொடிய நோய்களான டெங்கு, விஷ ஜுரம் போன்றவைகளுக்கு நிலவேம்புக் குடிநீர், மலைவேம்புக் கஷாயம், பப்பாளிச் சாறு போன்ற இயற்கை  மூலிகை மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் வழங்க உத்தரவிட்டு சித்த மருத்துவத்தின் சிறப்பை வெளிப்படுத்தினார்.
கருவுற்ற தாய்மார்களுக்கு மாதுளை மணப்பாகு, உரை மருந்துகள் ஆகிய 11 வகையான சித்த  சஞ்சீவி மருந்துப் பெட்டகம் வழங்கி சித்த மருத்துவத்துக்குச் சிறப்பு செய்தார். 
அதேபோல தற்போதைய அரசும் பதிவு பெறாத பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு அரசுப் பதிவு வழங்கிப் பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments