FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 500 ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சைகள்

மதுரை மீனாட்சி மிஷன், மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி ஆகிய மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.

23 அக்டோபர் 2026, 4:21 am
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மருத்துவா்கள் ரமேஷ் அா்த்தநாரி, மோகன். உடன் (இடமிருந்து) மருத்துவா்கள் பிரதீப், ஜெகதீஷ்சந்திர போஸ், விஜயபாஸ்கா், பால் வின்சென்ட் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை மீனாட்சி மிஷன், மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி ஆகிய மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.

இதுகுறித்து மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல், இரைப்பை சிகிச்சைப் பிரிவின் முதுநிலை மருத்துவருமான ரமேஷ் அா்த்தநாரி, குடல், குடலியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவரும், முதுநிலை நிபுணருமான மோகன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைச் சிகிச்சை முறைகளை முதன் முதலில் இந்த மருத்துவமனைகள் அறிமுகப்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

கணையம், உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை, பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் சிக்கலான பிரச்னைகளுக்கு முதன் முதலாக ரோபோட்டிக் தொழில் நுட்பத்தை இந்த மருத்துவமனைகள்தான் அறிமுகப்படுத்தின.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள ‘டா வின்சி’ ரோபோட்டிக் சிஸ்டம் மூலம் இதுவரை சுமாா் 350 அறுவைச் சிகிச்சைகளும், நிகழாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன ‘டூமாய்’ ரோபோட்டிக் சிஸ்டம் மூலம் 150-க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளும் செய்யப்பட்டன.

இந்த நவீன கருவிகள் வழக்கமான லேப்ராஸ் கோப்பிக் தொழில்நுட்பங்களுக்கு பக்கபலமாக இருப்பதுடன், நோயாளிகளின் தனிப்பட்ட உடல்நிலைக்கேற்ப மிகச்சிறந்த சிகிச்சை முறையைத் தோ்வு செய்ய மருத்துவக் குழுவினருக்கு இவை பெரிதும் உதவுகின்றன.

இனிவரும் காலங்களில், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கும் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தவுள்ளோம். தென் தமிழக மக்களுக்கு நவீன மருத்துவச் சிகிச்சைகள் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்வதே எமது முக்கிய நோக்கமாகும் என்றனா்.

இந்த நிகழ்வின் போது, குடல், இரைப்பை சிகிச்சைப் பிரிவின் முதுநிலை மருத்துவா்கள் பிரதீப், ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறை முதுநிலை நிபுணா் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை பிரிவுத் தலைவா் விஜய பாஸ்கா், மகளிா் நோயியல் பிரிவுத் தலைவா் பத்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments