FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெள்ளக்கோவிலில் ரேக்ளா பந்தயம்

வெள்ளக்கோவிலில் 186 மாட்டு வண்டிகள் பங்கேற்ற ரேக்ளா பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

வெள்ளக்கோவிலில் 186 மாட்டு வண்டிகள் பங்கேற்ற ரேக்ளா பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
பிளாஸ்டிக் ஒழிப்புக்கு ஆதரவாக வெள்ளக்கோவில் ரேக்ளா கிளப், நிழல்கள் அறக்கட்டளை, காங்கயம் கால்நடை காப்போர் சங்கம் ஆகியவை சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் இதைத் துவக்கி வைத்தார். 
வெள்ளக்கோவில் ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், நகரச் செயலாளர் ஆர்.மணி, திமுக ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியம், நகரச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
திருச்சி, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் மொத்தம் 186 ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. 200 மீட்டர் பந்தயத்தில் 126 வண்டிகள், 300 மீட்டர் பந்தயத்தில் 60 வண்டிகள் பங்கேற்றன. 
இதில், பொள்ளாச்சி வி.புளியம்பட்டியைச் சேர்ந்த ஆறுச்சாமியின் மாட்டு வண்டி முதல் பரிசைப் பெற்றது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments