FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மண்டல கூட்டுப் பயிற்சி முகாம் போட்டி: திருப்பூர் நஞ்சப்பா பள்ளி அணி 34 பதக்கம் பெற்று சாதனை

தமிழ்நாடு வான் படைப் பிரிவு 5-ன் சார்பில் மண்டல கூட்டு பயிற்சி முகாம் சேலம் கருப்பூர் அரசு பொறியியல்  கல்லூரியில் நடந்தது. முகாமில்

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

தமிழ்நாடு வான் படைப் பிரிவு 5-ன் சார்பில் மண்டல கூட்டு பயிற்சி முகாம் சேலம் கருப்பூர் அரசு பொறியியல்  கல்லூரியில் நடந்தது. முகாமில் சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா 9 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 45 மாணவர்கள் பள்ளியின் என்.சி.சி. அலுவலர் ராஜசேகரன் தலைமையில் கலந்து கொண்டனர். 
முகாமில், துப்பாக்கி சுடுதல், மாரத்தான், அணிவகுப்பு, டென்ட் அமைத்தல் உள்பட 19 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நஞ்சப்பா பள்ளி என்.சி.சி. குழு அனைத்து போட்டிகளிலும் கலந்துகொண்டு 34 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், சிலம்பம், டிரில், லைனரியா ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று 3 கோப்பைகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். இத்துடன் பள்ளி மாணவர் சிவராமகிருஷ்ணனுக்கு சிறந்த வீரருக்கான விருதும் கிடைத்துள்ளது. அரசு பள்ளிகளில்  சிறந்து விளங்கிய நஞ்சப்பா பள்ளி அணியின்  வெற்றியை சேலம் ஆட்சியர் ரோஹிணி, விங் கமாண்டர் ஜெயந்தன் ஆகியோர் பாராட்டினர். 
வெற்றி பெற்ற  மாணவர்களுக்கும்,  தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும்  பாராட்டு விழா நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை வகித்து பதக்கங்களைப் பெற்ற என்.சி.சி மாணவர்களுக்கும், சிறந்த வீரர் விருது பெற்ற சிவராமகிருஷ்ணன், தேசிய அளவில் கராத்தே போட்டியில் 2ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்ற  ஃபரிதுல் அஸ்லம் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments