சாலை விபத்தில் இளைஞர் சாவு
அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர், சபரி நகரைச் சேர்ந்த வேந்தர்லிங்கம் மகன் மணிகண்ட பிரபு (22). இவர், அவிநாசியில் இருந்து கருவலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் அருகே செல்லும்போது, எதிரேவந்த மற்றொரு இருசக்கர வாகனம், இவரது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்ட பிரபு உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.