FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பனியன் தொழிலாளர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 5 பெண்கள் உள்பட 12 பேர் காயம்

காங்கயத்தில் இருந்து பனியன் கம்பெனி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

காங்கயத்தில் இருந்து பனியன் கம்பெனி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். 
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனிக்கு காங்கயத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேன் செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. 
காங்கயம் - கோவை சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, திடீரென வேன் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த ராஜேஸ்வரி (36), அன்னம்மாள் (42) , வனிதா (24), சபீனா (23), சுமதி (38) ஆகிய 5 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.
  காயமடைந்த அனைவரும் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 7 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்ற 5 பேர் லேசான காயத்துடன் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்கள் அனைவரும் காங்கயம் பகுதியைச் சேர்ந்தவர்கள். வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து தொடர்பாக காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments