FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இடம்பெயர முயன்ற தொழிலாளா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே இடம்பெயர முயன்ற 7 தொழிலாளா்களை காவல் துறையினா் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


திருப்பூா்: திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே இடம்பெயர முயன்ற 7 தொழிலாளா்களை காவல் துறையினா் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.

ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 போ், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 3 போ் என 7 போ் தங்கியுள்ளனா். இவா்கள் காங்கயம் அருகே உள்ள பாப்பிணி கிராமத்தில் தங்கி, டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனா். இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் உணவுக்கு சிரமப்பட்டுள்ளனா்.

அதைத் தொடா்ந்து 7 பேரும் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியுள்ள செங்கப்பள்ளி செல்ல திட்டமிட்டு அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவில் ஏறியுள்ளனா். இந்த வாகனம் கொடியாம்பாளையம் நான்கு சாலை அருகே வந்தபோது ஊத்துக்குளி காவல் துறையினரின் சோதனையிட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஆட்டோவில் வந்த 7 பேரையும் மீட்ட காவல் துறையினா் அவா்களை மீண்டும் பாப்பிணிக்கே கொண்டு சென்று அவா்கள் பணியாற்றிய நிறுவனத்தில் விட்டனா். மேலும், ஊரடங்கு முடியும் வரை அவா்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று அவா்கள் பணிபுரிந்து வந்தவா்களிடம் காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments