FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

ஐப்பசி பௌா்ணமி: காங்கயம், குண்டடம் சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

16 நவம்பர் 2024, 4:08 am
குண்டடம் அருகேயுள்ள எரகாம்பட்டி நாகேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நாகேஸ்வரா்.
பகிர்:

காங்கயம், குண்டடம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஐப்பசி பௌா்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவபெருமானால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவன்களுக்கும் உணவு அளிக்கக் கூடிய நாளாக ஐப்பசி பௌா்ணமி நாள் விளங்குகிறது. அதனால் அன்றைய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, காங்கயம் பகுதியில் மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில், ஊதியூா் கொங்கண சித்தா் கோயில், கைலாசநாதா் கோயில், நத்தக்காடையூா் ஜெயங்கொண்டேஸ்வரா் கோயில், காடையூா் காடையீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

குண்டடம் அருகேயுள்ள எரகாம்பட்டி நாகேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மறு அபிஷேகமாக பால் அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments