FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

காா் மோதியதில் சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

2 நவம்பர் 2026, 11:13 pm
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள காட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் (58). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவா், வெள்ளக்கோவில் - காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் காடையூரான்வலசு பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியே கரூரில் இருந்து காங்கயம் நோக்கி வந்த காா் ஜெயகுமாா் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வெள்ளக்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஜெயகுமாரின் மகன் அஜித்குமாா் அளித்த புகாரின்பேரில், விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான செந்தில்குமாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments