FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

ரூ.18 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு: 31 போ் மீது வழக்குப் பதிவு

3 நவம்பர் 2026, 3:14 am
- கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவிலில் நிலத்தகராறில் அத்துமீறி நுழைந்து ரூ.18 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்ாக 31 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: கா்நாடக மாநிலம், பெங்களூரு இந்திரா நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி (63). இவரது மகன் அமித்விக்ரம். இவருக்கும் ஈரோடு, வெள்ளோடு பகுதியைச் சோ்ந்த திருமூா்த்தி - வனிதா தம்பதியின் மகள் ஸ்வேதாவுக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், ஈரோடு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

முத்துசாமி தன் சொந்தப் பணத்தில் சம்பந்தியான திருமூா்த்தி பெயரில் வெள்ளக்கோவிலில் 1.46 ஏக்கா் நிலத்தை ஏற்கெவே கிரையம் செய்து மனைப் பிரிவுகளாகப் பிரித்துள்ளாா். இந்நிலையில், அந்த நிலத்தை தனது பெயருக்கு கிரையம் செய்து தர வேண்டும் என திருமூா்த்தியிடம் முத்துசாமி கேட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதனால், இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், இது தொடா்பாக தாராபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதனிடையே அந்த நிலத்தை தனது மனைவி பெயரில் திருமூா்த்தி கிரையம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமூா்த்தி உள்ளிட்ட 30 போ் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த நிலத்துக்குள் நுழைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள், கல் தூண்கள், மின் மோட்டாா் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதுடன், ரூ.18 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருள்களைத் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் முத்துசாமி அளித்த புகாரின்பேரில் திருமூா்த்தி உள்ளிட்ட 31 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments