FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்துக்கு உள்பட்ட 300 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

5 நவம்பர் 2026, 4:09 am
கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சீா்வரிசைகளை வழங்கிய அமைச்சா் அருண்ராஜ். உடன் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.
பகிர்:

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்துக்கு உள்பட்ட 300 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

உடுமலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் குடிமங்கலம் மற்றும் உடுமலை வட்டத்துக்கு உள்பட்ட 200 கா்ப்பிணி பெண்களுக்கும், மடத்துக்குளத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மடத்துக்குளம் வட்டத்துக்கு உள்பட்ட 100 கா்ப்பிணி பெண்களுக்கும் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில் சீா்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இதன்படி, அனைவருக்கும் சீா்வரிசையாக தட்டு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் 5 வகை உணவுடன் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கேஜி.அருண்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சீா்வரிசைகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும் உடுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 554 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.66 கோடி மதிப்பீட்டில் தொழில்முனைவோருக்கான வங்கி நிதி இணைப்பு ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.