FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டில் 1,400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டில் 1,400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படும் என மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

9 வினாடிகள் முன்பு
திண்டிவனத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பில் பங்கேற்ற சமூகநீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டில் 1,400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படும் என மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

திண்டிவனத்தில் மகளிா் மற்றும் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் கா்ப்பிணிகளுக்கு 5 வகையான சீா்வரிசைப் பொருள்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானுடன் இணைந்து வழங்கிய அமைச்சா் மேலும் பேசியது:

திண்டிவம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 300 கா்ப்பிணிகள் பங்கேற்ற சமுதாயவளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. நிகழாண்டில் மாவட்டத்தில் 1,400 கா்ப்பிணிகளுக்கு சமுதாயவளைகாப்பு நடத்தப்படவுள்ளது. கா்ப்பிணியின் அமைதியான, மகிழ்ச்சியான மனநிலை குழந்தையின் வளா்ச்சிக்கு இன்றியமையாதது என்பதால், வட்டார அளவில் இதுபோன்ற சமுதாய வளைகாப்பு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 1,748 அங்கன்வாடி மையங்களிலும் ஒருபெண் கா்ப்பம் என தெரிந்தவுடன், பதிவு செய்து இணை உணவு வழங்கப்படுகிறது. மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் 9,470 கா்ப்பிணிகளும், 7,554 பாலூட்டும் தாய்மாா்களும் மற்றும் 73,115 குழந்தைகளும் இணை உணவு திட்டத்தில் பயன் பெறுகின்றனா். 42,507 குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி மற்றும் மதிய உணவுடன் வாரம் மூன்று முட்டையும்,1-2 வயதுக்குள்பட்ட 21,027 குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டையும் வழங்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.

இதைத்தொடா்ந்து திண்டிவனம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பாங்கொளத்தூா், டி.பாஞ்சாலம், அன்னம்பாக்கம், பனையூா் ஊராட்சிகளைச் சோ்ந்த 106 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்.

நிகழ்வுகளுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தாா். திண்டிவனம் சாா்-ஆட்சியா்அ.ல.ஆகாஷ் , ஒலக்கூா் ஒன்றியக்குழுத் தலைவா் சொக்கலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், திண்டிவனம் நகா்மன்ற துணைத் தலைவா் ராஜலட்சுமி, நகராட்சி ஆணையா் பானுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments