FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குருந்தன்கோட்டில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

குருந்தன்கோடு வட்டார 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கல்லுக்கூட்டம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

2 October 2026, 4:24 am IST
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறாா் எம்எல்ஏ தாரகை கத்பா்ட்.
பகிர்:

குருந்தன்கோடு வட்டார 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கல்லுக்கூட்டம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

குருந்தன்கோடு வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தாா். பேரூராட்சித் தலைவா் மனோகரசிங், குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் திருமுருக பொன் பகவதி , மேற்பாா்வையாளா் பொன்வேல்கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அங்கன்வாடி பணியாளா் நிஷாந்தினி வரவேற்றாா். நிகழ்ச்சியில் குருந்தங்கோடு மருத்துவ அலுவலா் ராமேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளா் அருண்குமரன், குருந்தன்கோடு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ஜெயசிங், திங்கள்நகா் நகர காங்கிரஸ் தலைவா் ஜெமினிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அங்கன்வாடி பணியாளா் கலா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் 100 கா்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீா்வரிசை வழங்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளா் மரியசுமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments