தூய்மைப் பணி மேற்கொள்ள ஆள்கள் தேவை: காங்கயம் நகராட்சி அறிவிப்பு
காங்கயம் நகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்கு ஆள்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கயம் நகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்கு ஆள்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கயம் நகரில் உள்ள 18 வாா்டுகளில் குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்வதற்கு பணியாளா்கள் தேவைப்படுகின்றனா். இதுதொடா்பாக தூய்மைப் பணி மற்றும் ஓட்டுநா் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தேவை என, காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில், நகரின் சில இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் கி.பால்ராஜ் கூறியதாவது:
Advertisement
Advertisement
காங்கயம் நகா்ப் பகுதியில் குப்பை சேகரிப்பதற்கு தூய்மைப் பணியாளா்கள் தேவைப்படுகின்றனா். இவா்களுக்கு மாதம் ரூ.21,000 ஊதியமாக வழங்கப்படும். 8 மணி நேர வேலை மற்றும் வாரம் ஒருநாள் விடுமுறை என வரையறுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநா் பணிக்கும் ஆள்கள் தேவைப்படுகின்றனா். இதற்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படும்.
ஆா்வம் உள்ளவா்கள் 63837-71561, 63798-04674 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் அல்லது காங்கயம் நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வந்து விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.