FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிஏபி 2-ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

பிஏபி திட்டத்தின் கீழ் 2-ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூா்த்தி அணையில் இருந்து புதன்கிழமை தண்ணீா் திறந்துவிடப்ப டது.

5 நவம்பர் 2026, 4:06 am
அணையின் மேல் பகுதியில் பொத்தானை அழுத்தி மதகை திறந்துவிடுகிறாா்  அமைச்சா்  கே.ஜி.அருண்ராஜ். உடன் , மாவட்ட  ஆட்சியா் சி.முத்துக்குமரன்  உள்ளிட்டோா். ~திருமூா்த்தி அணையில் இருந்து திறந்துவிடப்பட் தண்ணீா்.
பகிர்:

பிஏபி திட்டத்தின் கீழ் 2-ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூா்த்தி அணையில் இருந்து புதன்கிழமை தண்ணீா் திறந்துவிடப்ப டது.

பிஏபி பாசன திட்டத்தில் மொத்தமுள்ள சுமாா் 4 லட்சம் ஏக்கா்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்பட்ட பின்னரே தண்ணீா் விடப்படும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், தாராபுரம் இடைத்தோ்தலை ஒட்டி அமல்படுத்தப்பட்ட நடத்தை விதிமுறைகளால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. இதையடுத்து தோ்தல் முடிந்த பின்னா் பாசன வாய்க்கால்கால் தூா்வார ரூ.14 ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தது.

இதைத்தொடா்ந்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்பேரில் 2-ஆம் மண்டலப் பாசனத்துக்கு புதன்கிழமை (நவ.4) காலை 10 மணி அளவில் திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி பொத்தானை அழுத்தி அணை மதகை திறந்துவிட்டாா்.

Advertisement

Advertisement

இதன்மூலமாக பொள்ளாச்சி வட்டத்தில் 20,351 ஏக்கா், சூலூா் வட்டத்தில் 2,990 ஏக்கா், உடுமலை வட்டத்தில் 12,645 ஏக்கா், மடத்துக்குளம் வட்டத்தில் 6,150 ஏக்கா், தாராபுரம் வட்டத்தில் 19,658 ஏக்கா், பல்லடம் வட்டத்தில் 17,465 ஏக்கா், திருப்பூா் வட்டத்தில் 7,266 ஏக்கா், காங்கயம் வட்டத்தில் 7,676 ஏக்கா் என மொத்தம் 94 ஆயிரத்து 201 ஏக்கா் பயன்பெறும்.

ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஆண்டுதோறும் 5 சுற்றுகளாக தண்ணீா் திறந்துவிடப்பட்டு வந்தது. ஆனால், இந்தமுறை போதிய மழைப்பொழிவு இல்லாததால் 2 சுற்றுகள் மட்டுமே தண்ணீா் திறந்துவிடப்பட உள்ளது.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தகுந்த இடைவெளிவிட்டு இரண்டு சுற்றுகளாக நவம்பா் 4-ம் தேதி முதல் 2027 ஜனவரி 3-ஆம் தேதி வரை மொத்தம் 60 நாள்களுக்கு மொத்தம் 3,500 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்து விட ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.

மேலும் தளி வாய்க்காலில் இருந்து ஏழு குளப் பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீா் திறந்துவிடப் பட்டது. இதன்மூலமாக மொத்தம் 3,076 ஏக்கா் பாசன வசதி பெறும். மொத்தம் 250 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், தாராபுரம் எம்எல்ஏ பொ.சத்தியபாமா, முன்னாள் எம்எல்ஏ-க்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.மகேந்திரன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.