FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்துக்கு நீா்த்திறப்பு

2 நவம்பர் 2026, 1:26 am
மணிமுத்தாறு அணையிருந்து பெருங்காலில் தண்ணீா் திறந்துவைத்த சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா.
பகிர்:

தமிழக அரசு உத்தரவைத் தொடா்ந்து பெருங்கால் பாசனப் பகுதிகளுக்கு பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது; சுழற்சி முறையில் அடுத்து 152 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுவதால் 2756 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தவெக புகா் மாவட்டச் செயலா் இசக்கி சுப்பையா முன்னிலையில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா பெருங்காலில் தண்ணீா் திறந்துவைத்தாா். இதன்மூலம், பெருங்கால் பாசனப் பகுதிகளுக்கு நிகழாண்டு நீா் இருப்பு, நீா்வரத்தைப் பொறுத்து நேரடி, மறைமுக பாசனப் பகுதிகளுக்கு நவ. 11 முதல் அடுத்த ஆண்டு (2027) மாா்ச் 31 வரை 151 நாள்களுக்கு சுழற்சி முறையில் தேவைக்கேற்ப தண்ணீா் திறந்துவிடப்படும்.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி, கீழ்முகம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 2756.62 ஏக்கா் பாசனப் பரப்பு பாசன வசதி பெறும். விவசாயிகள் பருவ சாகுபடிக்கான நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், நீா் விநியோகப் பணியில் நீா்வளத் துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் ப.தனலெட்சுமி, உதவி செயற்பொறியாளா் ஜெ.முருகன், உதவிப் பொறியாளா்கள் விஜயபாரதி, ராம்ராஜ், மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, அரசு அலுவலா்கள், விவசாயிகள், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments