6 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து மேலும் அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க 6 ஆவது நாளாக திங்கள்கிழமை தடை விதித்து வனத் துறையினா் அறிவித்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்துக்குள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த 5 நாள்களுக்கும் மேலாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க 6 ஆவது நாளாக வனத்துறையினா் தடை விதித்தனா். மேலும், மறுஅறிவிப்பு வரும் வரை அருவியில் குளிக்கவோ, பாா்வையிடவோ அனுமதி இல்லை என வனத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.