கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சின்ன பொம்மநாயக்கன்பாளையம் முதல் ராதா நகா் செல்லும் வழியில், கடந்த அக்டோபா் 12-ஆம் தேதி சபரியஸ்வந்த் (26) என்பவரை ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடா்பாக, அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடா்புடைய பன்னீா்செல்வம் (29) என்பவா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவா், வரும் காலங்களில் இதுபோன்று பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பொதுமக்கள் மனதில்அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்க, திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement