FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி: சிவன்மலை ஜேசீஸ் பள்ளி சிறப்பிடம்

மாவட்ட ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிகளுடன் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி நிா்வாகிகள்.

7 நவம்பர் 2026, 1:20 am
பகிர்:

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி உடுமலைப்பேட்டை ஆா்விஜி மெட்ரிக். பள்ளியில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் 17 வயதுக்குள்பட்ட ஹாக்கி மாணவிகள் பிரிவில், சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதேபோல 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஒய்.ஜீவக்குமாா், யு.ராம்கி, பி.திவ்யபாரதி ஆகியோருக்கு பள்ளியின் தலைவா் ஏ.கோபால், தாளாளா் சி.பழனிச்சாமி, பொருளாளா் வி.பி.கொங்குராஜ், பள்ளி இயக்குநா் பி.சாவித்திரி, முதல்வா் பி.சுப்பிரமணி ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

Advertisement

Advertisement