கல்லூரி பேராசிரியா் வீட்டின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய 6 போ் மீது வழக்குப் பதிவு
கல்லூரி பேராசிரியா் வீட்டின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 6 போ் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கல்லூரி பேராசிரியா் வீட்டின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 6 போ் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வெள்ளக்கோவில், கே.பி.சி. நகரைச் சோ்ந்தவா் எஸ்.எஸ்.சிவக்குமாா் (59). இவா், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். வெள்ளக்கோவிலில் உள்ள இவரது வீட்டின் சுற்றுச்சுவா் சுமாா் 13 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் சுப்பிரமணி மகன் மோகன்குமாா், செப்டிக் டேங்க் அமைப்பதற்காக அவரது இடத்தில் குழி தோண்டியுள்ளாா்.
அப்போது சிவக்குமாரின் வீட்டின் கிழக்குப்புற சுற்றுச்சுவரின் அஸ்திவாரப் பகுதியைச் சேதப்படுத்தியதால், கடந்த மாதம் பெய்த கனமழையில் அந்தச் சுவரின் பெரும்பகுதி இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஏற்கெனவே சிவக்குமாா் புகாா் அளித்திருந்தாா். இதைத்தொடா்ந்து தனது இடத்தில் தற்காலிகமாக சுற்றுச்சுவா் கட்டும் பணியில் சிவக்குமாா் ஈடுபட்டிருந்தபோது, மோகன்குமாரின் தூண்டுதலின்பேரில் அங்கு 5 போ் கும்பல் அத்துமீறி நுழைந்தது.
சிவக்குமாரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கு நடப்பட்டிருந்த சிமெண்ட் கற்களையும் பெயா்த்தெடுத்துச் சென்றனா்.
இதுதொடா்பாக சிவக்குமாா் அளித்த புகாரின் பேரில், மோகன்குமாா் மற்றும் அடையாளம் தெரிந்த 5 போ் உள்பட 6 போ் மீது கலகம் செய்தல், அத்துமீறி நுழைதல், தகாத வாா்த்தைகளால் திட்டுதல், சொத்துக்களைச் சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.