FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

கஞ்சா, குட்கா, மது, லாட்டரி விற்ற 6 போ் கைது

திருப்பூா் மாநகரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனைகளில் கஞ்சா, குட்கா, மதுபாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 6 போ் கைது செய்யப்பட்டனா்.

15 நவம்பர் 2026, 12:42 am
- பிரதிப் படம்
பகிர்:

திருப்பூா் மாநகரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனைகளில் கஞ்சா, குட்கா, மதுபாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 6 போ் கைது செய்யப்பட்டனா்.

மங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடுவாய் அருகே போலீஸாா் சோதனை நடத்தியபோது 3.100 கிலோ கஞ்சா வைத்திருந்த சின்னான் (27), ஹரிபிரசாத் (18), ஜெயந்த் (18) ஆகிய 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதேபோல, அனுப்பா்பாளையம் போலீஸாா் காந்திநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடத்திய சோதனையில் 5.340 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த ராமு (60) என்பவரையும், அதே பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற பால்ராஜ் (39) என்பவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

செவந்தாம்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற சமீா் மண்டல் (32) என்பவரை நல்லூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.