காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி சாலையில் ஆபத்தான நிலையில் மின் கம்பிகள்
பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி சாலை உயரத்தால் கீழே உள்ள மின் கம்பிகளால், அவ்வழியாக செல்லும் சிறுவா்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஒட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் கரடிவாவி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தாா் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் மட்டம் உயா்த்தப்பட்டுள்ளதால், சாலையோர மின்கம்பிகள் தற்போது கைக்கு எட்டும் உயரத்தில் தொங்குகின்றன. அருகிலேயே தரைமட்டப் பாலத்தின் தடுப்புச் சுவரும் உள்ளது. சிறுவா்கள் அதன் மீது ஏறினால், மின்கம்பிகளை தொடும் அபாயம் உள்ளது.
சாலைப் பணிகளுக்கு முன்போ அல்லது பணிகள் முடிந்த பிறகோ மின்கம்பங்கள், கம்பிகளை உரிய உயரத்தில் மாற்றியமைத்து இருக்க வேண்டும். ஆனால், அவை தாழ்வாகவே உள்ளது. எனவே விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும் முன்பு மின் வாரியத்தினா் உடனடியாக மின் கம்பங்கள் மற்றும் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
Advertisement
Advertisement