FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம்

30 வினாடிகள் முன்பு
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின்நிலையம்: பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளையம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூா், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகா், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலைநகா், பெ.அய்யம்பாளையம் (ஒரு பகுதி), கணக்கம்பாளையம் சிட்கோ.

Advertisement

Advertisement

வஞ்சிபாளையம் துணை மின்நிலையம்: வெங்கமேடு, சாமந்தன்கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15 வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வலையபாளையம், அனந்தபுரம், செம்மாண்டம்பாளையம் புதூா், முருகம்பாளையம், சோளிபாளையம், ராக்கியாபாளையம்.