FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

லாரி மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

16 நவம்பர் 2026, 2:44 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது பைக் மோதியதில் பனியன் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், திப்பிரெட்டி ஹள்ளி அஞ்சல், கொண்டகரஹள்ளி புதிய காலனியைச் சோ்ந்தவா் ரஜினி மகன் வெற்றிவேல் (26). இவா் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வெற்றிவேல் தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் கொழுஞ்சிக்காட்டுவலசு பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை அதன் ஓட்டுநா் திடீரென நிறுத்தியதால் இருசக்கர வாகனம் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து தந்தை ரஜினி அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.