மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதூரைச் சோ்ந்தவா் வெள்ளியங்கிரி (60). இவரது மகன் தீனதயாளன் (21) தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
கடந்த 8-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த தீனதயாளன் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement