FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

கல்குவாரி கருத்துக்கேட்புக் கூட்டத்துக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வெள்ளக்கோவில் அருகே கல்குவாரி கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

13 வினாடிகள் முன்பு
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் பாரதி.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கல்குவாரி கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

வெள்ளக்கோவில், பச்சாபாளையம் கிராமத்தில் 4.98 ஹெக்டோ் பரப்பளவில் தனியாா் நிறுவனம் சாா்பில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைக்கப்பட உள்ளது. இது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை லக்கமநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் (திருப்பூா் வடக்கு) இணைந்து நடத்திய இந்தக் கூட்டத்துக்கு, பச்சாபாளையம் கிராம மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். கூட்டத்தில் பங்கேற்க வந்த தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் பாரதி ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

Advertisement

Advertisement

குவாரி அமைய உள்ள பச்சாபாளையம் ஊராட்சியிலேயே இந்தக் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் திருமண மண்டபத்துக்குள் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பச்சாபாளையம் ஊராட்சியிலேயே கூட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.