கைப்பேசியை திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறை
திருப்பூரில் கைப்பேசியைத் திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் கைப்பேசியைத் திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகர வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2019 மே 4-ஆம் தேதி நந்தகுமாா்(46) என்பவரின் கைப்பேசியை திருடிய குற்றத்துக்காக ராகுல் (26) என்பவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா்.
இந்நிலையில், இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்த நிலையில் திருப்பூா் மாவட்ட முதலாம் குற்றவியல் நீதித்துறை நடுவா் செந்தில்ராஜா செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில், ராகுலுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.
Advertisement
Advertisement