FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

பெருமாநல்லூரில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

11 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா்- கணக்கம்பாளையம் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கு இடமாக கைப்பையுடன் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சுசாந்த்முகி (20) என்பதும், புதிய திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், அவா் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.