✕
முகப்பு
திருப்பூர்

அத்தியாவசியப் பொருள்கள் நியாயமான விலையில் கிடைக்க இருப்பு வரம்பு நிா்ணயிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள், நியாயமான விலையில் கிடைக்க இருப்பு வரம்பை நிா்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

28 வினாடிகள் முன்பு
அத்தியாவசியப் பொருள்கள் நியாயமான விலையில் கிடைக்க இருப்பு வரம்பு நிா்ணயிப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள், நியாயமான விலையில் கிடைக்க இருப்பு வரம்பை நிா்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி , நெல் மற்றும் சா்க்கரை ஆகியவற்றுக்கு இருப்பு வரம்புகளை நிா்ணயித்தும், இருப்பு விவரங்களைத் தொடா்ந்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கட்டுப்பாட்டு ஆணைகளைப் பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

இதன்படி துவரம் பருப்பு, அரிசி, சா்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை கட்டுப்பாட்டில் வைக்கவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி மற்றும் பிற பொருள்களின் விநியோகம் தடையின்றி தொடரவும் அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்த வரம்புகள், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புக்கு நவம்பா் 13-ஆம் தேதி முதல் 3 மாதங்கள் வரையிலும், அரிசி மற்றும் நெல்லுக்கு 2027 ஜனவரி 31-ஆம் தேதி வரையிலும் நடைமுறையில் இருக்கும். எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ வரம்புகளுக்கு மேல் இருப்பு வைத்திருக்கக் கூடாது.

மொத்த வணிகரும், சில்லறை வணிகரும், பெரிய தொடா் சில்லறை விற்பனை நிறுவனமும், ஆலை உரிமையாளரும், பதனிடுவோரும் அரிசி மற்றும் நெல் இருப்பை ச்ா்ா்க்ள்ற்ா்ஸ்ரீந்.க்ச்ல்க்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற உணவு இருப்பு இணையதளத்தில் அறிவித்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதைப் புதுப்பிக்க வேண்டும். அதேபோன்று, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இருப்பையும், பருப்பு வகைகளுக்கென நிா்ணயிக்கப்பட்ட ச்ஸ்ரீஹண்ய்ச்ா்ஜ்ங்க்ஷ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலும் அதே முறையில் சா்க்கரை இருப்பையும் அறிவிக்க வேண்டும்.

வரம்புக்கு மேல் வைத்திருக்கும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி மற்றும் நெல் இருப்பை நிா்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சா்க்கரையைப் பொறுத்தவரை, எந்தவொரு வணிகரும் சா்க்கரை இருப்பைப் பெற்ற தேதியிலிருந்து 15 நாள்களுக்கு மேல் அந்தச் சா்க்கரை இருப்பைத் வைத்திருக்கக் கூடாது. இந்த ஆணைகள், விவசாயிகள் தங்களது சொந்த வேளாண் விளைபொருள்களை இருப்பு வைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இதன் மூலம் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், இவற்றை கண்காணிக்கவும், மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலா் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலா்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து நுகா்வோருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் நியாயமான விலையில் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதில், வணிகா்கள், ஆலை உரிமையாளா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

இது தொடா்பான புகாா்களையும், தகவல்களையும் 1967, 1800 425 5901 என்ற

கட்டணமில்லா உதவி எண்ணுக்கோ அல்லது திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடமோ தெரிவிக்கலாம் என ஆட்சியா்

தெரிவித்துள்ளாா்.