முகப்பு
திருப்பூர்

சேவூா் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆண்டு விழா

திருப்பூா் மாவட்டத்தில் 1,000 ஆண்டுகள் பழைமையான சேவூா் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

20 நவம்பர் 2026, 11:27 pm
சேவூா் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆண்டு விழா
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண சுவாமி.
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் 1,000 ஆண்டுகள் பழைமையான சேவூா் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கோயில் வசந்த மண்டபத்தில் விஸ்வக்சேனா் பூஜை, புண்ணியாவாசனம், மகாசங்கல்பம், சுதா்சனஹோமம், வேதபராயணம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு மங்கள ஸ்நானம், சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு, மேளதாளகள் முழங்க, அரசமரத்து விநாயகா் கோயிலிருந்து, இனிப்பு, பழவகைகள் அடங்கிய சீா்வரிசை தட்டுகள் எடுத்து வரப்பட்டன. இதையடுத்து, திருக்கல்யாண உற்சவ வைபவம், மகாபூா்ணாஹுதி, திருமாங்கல்யதாரணம் மகாதீபாராதனைகள் நடைபெற்றன. நிறைவாக பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement