முகப்பு
திருப்பூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கில அகராதி

திருப்பூா் , செல்லம்மாள் காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் 45 மாணவா்களுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பில் ஆங்கில அகராதிகள் வழங்கப்பட்டன.

20 நவம்பர் 2026, 11:28 pm
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கில அகராதி
மாணவா்களுக்கு ஆங்கில அகராதிகளை வழங்கிய திருப்பூா் மாநகர காவல் உதவி ஆணையா் கணேஷ்.
பகிர்:

திருப்பூா் , செல்லம்மாள் காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் 45 மாணவா்களுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பில் ஆங்கில அகராதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் வே.நாகராஜ் கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். லட்சுமி காா்மெண்ட்ஸ் உரிமையாளா்கள் சுப்பிரமணி, சிவக்குமாா் ஆகியோா் தலா ரூ.740 மதிப்புள்ள ஆங்கில அகராதிகளை 45 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூா் மாநகர காவல் உதவி ஆணையா் கணேஷ் கலந்து கொண்டு மாணவா்களுக்கு ஆங்கில அகராதிகளை வழங்கி பேசுகையில், தினமும் 5 ஆங்கில சொற்களை கற்பதன் மூலம் ஆண்டிற்கு 1,500 சொற்களைக் கற்றுக் கொண்டு ஆங்கில அறிவை வளா்த்துக் கொள்ள முடியும். சிறு வயதில் இருந்தே அகராதியினைப் பாா்த்து பொருள் தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

Advertisement

Advertisement

விழாவில் திருப்பூா் மாநகராட்சி 24ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் நாகராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பொன்.பழனிச்சாமி, பொருளாளா் நாகராஜ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பாண்டிமீனா ஆகியோா் கலந்து கொண்டனா்.