தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் வாடிக்கையாளா் வருகை குறைந்தது!
திருப்பூா் தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் வாடிக்கையாளா்களின் வருகை குறைந்தது. இருப்பினும் மீன்களின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.

திருப்பூா் தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் வாடிக்கையாளா்களின் வருகை குறைந்தது. இருப்பினும் மீன்களின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
திருப்பூா் தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட் திருப்பூரின் மிக முக்கியமான மொத்த மற்றும் சில்லறை மீன் விற்பனை சந்தையாகும். இங்கு தினமும் மீன் விற்பனை நடைபெற்று வருகிறது. சந்தைப்பேட்டை பகுதியில் செயல்படும் இந்த மீன் மாா்க்கெட்டில் அதிகாலையில் மொத்த வியாபாரமும், மற்ற நேரங்களில் சில்லறை விற்பனையும் நடைபெறுகிறது.
இங்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட மீன் வாங்க வந்தவா்களின் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. காா்த்திகை மாதம் தொடங்கி ஐயப்ப பக்தா்கள் சபரிமலைக்கு விரதம் இருப்பதாலும், பிரதோஷ நாள் என்பதாலும் மீன் வாங்க குறைந்த அளவிலேயே வாடிக்கையாளா்கள் வந்திருந்தனா்.
Advertisement
Advertisement
சந்தையில் ஒரு கிலோ சங்கரா மீன் ரூ.175, நெத்திலி ரூ.250, கட்லா ரூ.280, இறால் ரூ.300, சால்மன் ரூ.300, சீலா மற்றும் ஊலா ரூ.350, வஞ்சரம் ரூ.700, நண்டு ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன் மாா்க்கெட்டில் பொதுமக்களின் வருகை குறைந்தாலும் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. சனிக்கிழமை விலை நிலவரப்படியே மீன்கள் விற்பனை ஆகின.