முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை துணை ஆணையா் (கலால்) பாலமுருகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

57 வினாடிகள் முன்பு
வெள்ளக்கோவில் நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
வீட்டில் டிரம்மில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்த அதிகாரிகள்.
பகிர்:

வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை துணை ஆணையா் (கலால்) பாலமுருகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

நகராட்சியின் வாா்டு 13-க்கு உள்பட்ட உப்புப்பாளையம் கிழக்கு, வாா்டு எண் 5 இந்திரா நகா் பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருவதை அவா் பாா்வையிட்டாா். இப்பணியின் ஒரு பகுதியாக, அப்பகுதி முழுவதும் கொசுப் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வீடுகளில் சேமித்து வைக்கப்படும் குடிநீரை நன்றாக மூடி வைத்து கொசு புகாதவாறு பாதுகாக்க வேண்டும், குடிநீரை நன்கு காய்ச்சிப் பருக வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் உடனிருந்தனா்.