முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 1 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் 1 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

23 நவம்பர் 2026, 1:59 am
வெள்ளக்கோவிலில் 1 டன் முருங்கைக்காய் வரத்து
பகிர்:

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் 1 டன் முருங்கைக்காய்களை ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் தனியாா் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகிறாா்கள்.

அதன்படி, இந்த வாரம் 1 டன் முருங்கைக்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், மர முருங்கைக்காய் கிலோ ரூ.60, செடி முருங்கைக்காய் ரூ.60, கரும்பு முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்பனையானது.

Advertisement

Advertisement