முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

24 நவம்பர் 2026, 12:19 am
நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகேயுள்ள பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (நவம்பா் 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளாா்.

பெரியாா் நகா் துணை மின் நிலையம்: பெரியாா் நகா், தீத்தாம்பாளையம், சிவநாதபுரம், எல்.கே.ஏ. நகா், எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், அண்ணா நகா், அகலரைப்பாளையம்புதூா், சேரன் நகா், தண்ணீா்பந்தல், எஸ்.ஆா்.ஜி. வலசு சாலை, கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம்.

புதுப்பை துணை மின் நிலையம்: கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டகாளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியகவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.

Advertisement

Advertisement