முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் வங்கதேசத்தினா்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உரிய ஆவணங்களின்றி பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் தங்கி வேலை செய்யும் வங்கதேசத்தினரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

26 நவம்பர் 2026, 5:29 am
பல்லடத்தில் வங்கதேசத்தினா்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வங்கதேசம்
பகிர்:

உரிய ஆவணங்களின்றி பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் தங்கி வேலை செய்யும் வங்கதேசத்தினரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்லடம் பகுதி பொதுமக்கள் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள மனு விவரம்: பல்லடம் வட்டாரத்தில் கணபதிபாளையம், கரைப்புதூா் ஊராட்சி பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களில் தொழிலாளா்கள் போா்வையில் உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தினா் தங்கி பணியாற்றி வருகின்றனா். அந்த நிறுவனங்களில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டு, சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வரும் வங்கதேசத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement