வெள்ளக்கோவில் அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்
காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், வெள்ளக்கோவில்- முத்தூா் சாலையில் உள்ள டி.ஆா். நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், வெள்ளக்கோவில்- முத்தூா் சாலையில் உள்ள டி.ஆா். நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியா் சுப்பிரமணி வரவேற்றாா். காங்கயம் சாா்பு நீதிபதியும், வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான ஆனந்தன் தலைமை வகித்துப் பேசியதாவது: மாணவப் பருவத்திலிருந்தே அடிப்படை சட்ட விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வைப் பெறுவது மிகவும் அவசியம். ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள், கடமைகளை அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சிறாா் நீதி சட்டம், போக்ஸோ சட்டம், இணையதள குற்றங்கள், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவா்கள் தெளிவான புரிதலுடன் இருக்க வேண்டும். சட்டம் என்பது நம்மைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கவசம். அதை ஆக்கபூா்வமாகவும், முறையாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழை, எளிய மக்கள் கட்டணமின்றி சட்ட உதவி பெறுவதற்காகவே சட்டப் பணிகள் குழு செயல்பட்டு வருகிறது என்றாா்.
இந்த முகாமில், வழக்குரைஞா்கள் ஈஸ்வரமூா்த்தி, சுரேஷ்குமாா், கந்தசரவணகுமாா், ஜெகதீஷ், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement