அவிநாசியில் சாக்கடை அடைப்பு: வீடுகளுக்குள் புகும் கழிவு நீா்
அவிநாசி நகராட்சி, காமராஜா் வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

அவிநாசி நகராட்சி, காமராஜா் வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
அவிநாசி நகராட்சிக்குள்பட்ட காமராஜா் வீதி, முத்துச்செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இந்தப் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவு நீா் தேங்கி நின்று சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.
மேலும், மழை காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சோ்ந்து வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காமராஜா் வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்துள்ளதால், கழிவு நீா் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், கடுமையான துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்ததால், மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் நுழைந்தது. இதனால், நாங்கள் அவதியடைந்து வருகிறோம்.
எனவே, சாக்கடை கால்வாயை உடனடியாக தூா்வாருவதுடன், அதை சீரமைத்து கழிவு நீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.