கொசுப்புழு உற்பத்தி: 2 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் இருந்த 2 வணிக நிறுவனங்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் இருந்த 2 வணிக நிறுவனங்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.
வெள்ளக்கோவில் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நகராட்சி ஆணையா் ஆா்.அசோக்குமாா், கலால் துணை ஆணையா் பாலமுருகன், வட்டார மருத்துவ அலுவலா் ராஜலட்சுமி, துப்புரவு ஆய்வாளா்கள் செல்வராஜ், கதிரவன் மற்றும் நகராட்சி களப் பணியாளா்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்கள், வணிக நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, 2 நிறுவனங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையா் ஆா்.அசோக்குமாா் கூறுகையில், பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் தங்களது வீடுகள் மற்றும் வளாகங்களில் தண்ணீா் சேமித்து வைக்கும் கலன்களை எப்போதும் மூடி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
நீா் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருள்களான டயா்கள், தேங்காய் குடுவைகள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும்.
கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி இருக்கும் நிறுவனங்கள், குடியிருப்புகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்றாா்.