பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவா்களுக்கு ரூ.7.41 லட்சம் அபராதம்
திருப்பூா் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியவா்களிடமிருந்து ரூ.7.41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருப்பூா் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியவா்களிடமிருந்து ரூ.7.41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்கள், சாலைகள் மற்றும் நீா்நிலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க 4 மண்டலங்களிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, கடந்த செப்டம்பா் 11-ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில், 1-ஆவது மண்டலத்தில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிய 61 பேரிடம் ரூ.1.62 லட்சம், 2-ஆவது மண்டலத்தில் 90 பேரிடம் ரூ.2.48 லட்சம், 3-ஆவது மண்டலத்தில் 79 பேரிடம் ரூ.1.72 லட்சம், 4-ஆவது மண்டலத்தில் 73 பேரிடம் ரூ.1.59 லட்சம் என மொத்தம் 303 பேரிடம் ரூ.7.41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுகளைக் கொட்டப் பயன்படுத்தப்பட்ட 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடமும், மொத்த குப்பைகளை உருவாக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உரிய நிறுவனங்களிடமும் குப்பைகளை ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.